ஒரே தளத்தில் அரசு… அசுர வேகத்தில் நிர்வாகம்! ஜாதகம், வாஸ்து தான் காரணமா?
முதலமைச்சர் ஜோசப் விஜயின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்திற்கு இடம் பெயர்கிறது. முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகளையும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜயின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்திற்கு இடம் பெயர்கிறது. முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகளையும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடி காரணமாக முதலமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக பொதுத்துறை அறிவித்துள்ளது. 10வது மாடியில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. 1,3,5,7,8 ஆகிய மாடிகளில் உள்ள கூட்ட அரங்குகளை உடனடியாக பொது கட்டிட பிரிவுக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாதகம், வாஸ்து உள்ளிட்ட காரணங்களால் இந்த மாற்றம் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டாலும், நிர்வாகம் எப்படி இயங்குகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகே, அதை இன்னும் வேகமாகவும் திறம்படவும் மாற்ற முதலமைச்சர் விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதாவது முதலமைச்சர், தலைமைச் செயலாளர், தனிச் செயலாளர்கள், ஆலோசகர்கள், முக்கிய அதிகாரிகள் அனைவரும் ஒரே தளத்தில், ஒரே ஒருங்கிணைப்பில் செயல்படும் அமைப்பாக இனி இயங்கும். “அந்த அதிகாரியை அழையுங்கள், இந்த கோப்பை கொண்டு வாருங்கள்” என்ற தாமதங்களுக்கு இனி இடமில்லை. முடிவுகள் உடனுக்குடன், உத்தரவுகள் மின்னல் வேகத்தில், வலுவான ஒருங்கிணைப்பு, திறமையான நிர்வாகம், தொடர்ச்சியான கண்காணிப்பு என்ற எண்ணத்தில் முதல்வர் விஜய் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.