×

“பிக் பாஸில் முதல்வர் விஜய் பற்றி பேசவில்லை”- விஜய் டிவி விளக்கம்

 

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “போட்டியாளர்கள் அனைவரிடமும் ஜனநாயகம் என்றால் என்ன? தலைவர் என்றால் யார்? என அவரவர் கருத்தை கேட்டார். மேலும், ஷாத்திகாவின் வாக்குறுதிகளையும் படித்து காண்பித்தார். லீடர்னா என்னன்னே தெரியாம, லீடர்ஷிப்புன்னா என்னன்னே தெரியாம, வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு, பிரச்னைகளும்  பொறுப்பும் வரும்போது, எதிரணி மேல பழியைத் தூக்கிப் போட்டுட்டு, தெறிச்சு ஓடறது லீடருக்கான குவாலிட்டி இல்ல. அதுக்குப் பேரு ஏமாத்துவேலை” எனக் கூறினார். விஜய் சேதுபதியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தன. விஜய்யை விஜய் சேதுபதி மறைமுகமாக அட்டாக் செய்வதாக கண்டங்கள் வலுத்தன. 

இந்நிலையில் விஜய் டிவி தனது எக்ஸ் தளத்தில், “பிக் பாஸ் தமிழ் சீசன் 10 என்பது, அதற்கென நிறுவப்பட்ட வடிவம், கருப்பொருள் மற்றும் விளையாட்டுச் சூழலின் கட்டமைப்பிற்குள் தொகுத்து வழங்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், முகபாவனைகள் ஆகியவை அதன் வளர்ந்து வரும் கதைக்களத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன, மேலும் அவற்றை நிகழ்ச்சியில் நிகழும் சூழலின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும். நிகழ்ச்சி நிரலில் உள்ள எந்தவொரு குறிப்போ அல்லது வெளிப்பாடோ, நிகழ்ச்சியின் சூழலுக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, நிறுவனம், சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, அங்கீகரிப்பதாகவோ அல்லது கருத்துத் தெரிவிப்பதாகவோ கருதப்படக்கூடாது. நிகழ்ச்சி மற்றும் அதன் பொழுதுபோக்குச் சூழலுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விளக்கமோ அல்லது தொடர்போ நோக்கப்படவோ அல்லது அங்கீகரிக்கப்படவோ இல்லை” என விளக்கம் அளித்துள்ளது.