☰
×

“திசைமாறி சென்றுவிடாதீா்கள்”- M.L.A.-க்களுக்கு CM விஜய் அறிவுறுத்தல்

 

எதிர்கட்சிகள் விரிக்கும் TRAPஇல் மாட்டிக் கொள்ளாதீர்கள் என எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். 


மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். எம்எல்ஏக்களை 3 நாட்கள் அங்கேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனையின் போது முதல்வர் விஜய், தவெக - திமுக இடையில்தான் போட்டி,  எனவே திசை மாறி சென்றுவிடாதீர்கள், எதிர்க்கட்சியின் சதியில் சிக்கிவிடாதீர்கள். தவெக ஆட்சியை முடக்க எதிா்கட்சிகள் தொடா்ந்து சதி செய்வதால் கூடுதல் கவனம் தேவை. தொடர்ந்து மக்கள் சேவையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்துங்கள். எதிர்கட்சிகள் விரிக்கும் TRAP-ல் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

நம் கூட்டணியில் உள்ளவர்களை தவிர நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகம், எனவே நமக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். நமக்கு எதிாிகள் அதிகம் என்பதால் எந்த டிராப்-இலும் சிக்கிக்கொள்ளாதீா்கள். தவறான வழியில் செல்லும் எம்எல்ஏக்கள் யாராக இருந்தாலும் விடமாட்டேன். அனைவரும் கவனமுடனும், கண்ணியத்துடனும் செயல்பட வேண்டும். வெற்றிகரமாக ஆறு மாதத்தை நிறைவு செய்துள்ளோம்" என்று அறிவுறுத்தினார்.