மூப்பனார் வைகோ கொண்டுவர முடியாத மாற்றத்தை CM விஜய் கொண்டுவந்துள்ளார் - துரை வைகோ..!
Updated: Jun 4, 2026, 12:57 IST
தவெக அரசுக்கு குறைந்தது 6 மாத அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் புதிய அதிகாரிகள், அமைச்சர்கள் துறையை புரிந்துகொள்ள அவகாசம் தேவை என்றும் துரை வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க எம்.பி. துரை வைகோ கூறியதாவது மூப்பனார், வைகோ கொண்டுவர முடியாத மாற்றத்தை முதல்வர் விஜய் கொண்டுவந்துள்ளார். விஜய்யின் ஆட்சிக்கு 6 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு எப்படி இருந்ததோ, அப்படியே தான் இருக்கிறது. வட மாநிலங்களை விட தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைவாக உள்ளது. மின்துறை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் என கூறினார்