“என் அருமை சகோதரன் அஜித்துக்கு”- விஜய் அளித்த நெகிழ்ச்சி பரிசு
சில்வர்ஸ்டோனில், தமிழக முதல்வர் விஜய், அஜித் குமாருக்கு ஒரு சிறிய பந்தயக் காரைப் பரிசளித்தார்.
தமிழக முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்குவது, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுடன் செப்.,12ஆம் தேதி பிரிட்டன் சென்றார். அங்கு அவர் இந்த சில்வர்ஸ்டோன் கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற்ற மிச்செலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்தை நேரில் சென்று முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்கியூட்டில் கார் ரேஸ் முடிந்த பிறகு முதல்வர் விஜய் , அஜித் குமாருக்கு ஒரு சிறிய பந்தயக் காரைப் பரிசளித்தார். அதனுடன் கையெழுத்தில் ஒரு செய்தியும் இருந்தது. “அன்புடன், விஜய், என் அருமை சகோதரன் அஜித்துக்கு” என அதில் எழுதப்பட்டிருந்தது. அஜித் பதிலுக்கு ஒரு ஹெல்மெட்டை முதல்வர் விஜய்க்கு பரிசளித்தார்.