"மிகுந்த வேதனையடைந்தேன்"- வி.எஸ். பாபு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
Nov 19, 2026, 16:33 IST
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவுக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்யையும், ஆதரலையும் நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு. வி.எஸ்.பாபு அவர்களின் இழப்பு மிகப்பெரியது.அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழகம் முழுமுள்ள அவரது தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்