“வெளியே வேஷம் போடமாட்டோம்... திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான்”- விஜய்
திருப்பூர் தாராபுரம் அருகே சித்ராவுத்தன்பாளையத்தில் முதல்வர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். தவெக வேட்பாளர் சத்தியபாமகவுக்கு ஆடரவாக தாராபுரம் பொதுக்கூட்டத்தில் விஜய் வாக்கு சேகரித்தார். முன்னதாக பொதுக்கூட்டதிடலுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேடையில் பேசிய முதல்வர் விஜய், “எம்மதமும் சம்மதம் என்பதைவிட எம்மதமும் நம் மதம் என்ற நம்பிக்கையோடு அரசியலுக்கு வந்துள்ளோம். கிறிஸ்துமஸ்க்கும் வாழ்த்து சொல்லுவோம், கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்லுவோம், பக்ரீத்க்கும் வாழ்த்து சொல்லுவோம். 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்பியதை மறந்து அதிகாரத்தில் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தேன். மன்னராட்சி மனப்பான்மைஎனக்கு இல்லை. தோற்கடித்ததாக கொளத்தூர் மக்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். திமுக ஆட்சியின் தவறுக்காகவே கொளத்தூர் மக்கள் வாக்களிக்கவில்லை. வெளியே வேஷம் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் பம்மிக்கொண்டிருக்க மாட்டோம். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என கூறுவார்கள், இடைத்தேர்தலுக்கு பின் இப்படி ஒரு அறிக்கை வரும் பாருங்கள். ஆனால் மக்கள் தீர்ப்பை மதிக்கமாட்டார். அண்ணாவை மறந்து, அவர் ஆரம்பித்த கட்சியை மறந்து, திமுகவோடு கூட்டு சேர்ந்து சுற்றுவோர் நாம் கிடையாது. சாதாரண மக்களை தேர்தலில் நிற்க வைத்து, குறுநில மன்னர்களை தவெக தோற்கடிக்கிறது. திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான்..” என்றார்.