×

 ‘கேக்கெல்லாம் வெட்ட வேண்டாம்’- திருப்பி அனுப்பிய விஜய்

 

திருவள்ளூரில் ஏற்பட்ட வாயு கசிவு சம்பவம் காரணமாக முதலமைச்சரின் பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

நமது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததானம், கேக் வெட்டி கொண்டாட்டங்கள் மற்றும் வாண வேடிக்கை உள்ளிட்ட கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் முதல்வரின் பிறந்தநாளுக்காக தலைமைச் செயலகத்துக்கு சிறப்பு கேக் வரவைக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தினால் முதல்வர் தரப்பு `கேக்கெல்லாம் வெட்ட வேண்டாம்’ என சொல்லி கேக்கை திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 67 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 5 பேர் உயிரழந்த நிலையில் மேலும் ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.