CM தாராபுரம் வருகை - போக்குவரத்தில் மாற்றம்
CM விஜய் நாளை தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக முதல்வர் விஜய், நாளை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதனையொட்டி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்டில் கொண்டு தாராபுரத்தில் நாளை லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், கரூர்,திருப்பூர், பல்லடம் வழி்ாக செல்லும் லாரிகள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து, கார், இருசக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒட்டன்சத்திரம் வழியாக வரும் வாகனங்கள் உடுமலை-பொள்ளாச்சி வழியாகவும் கரூர் வழியாக வரும் வாகனங்கள் பழனி-பொள்ளாச்சி வழியாகவும் செல்லலாம். திருப்பூரில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை வழங்கப்பட்டுள்ளது.
CM பிரசார வாகனம் செல்லும்போது சில பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும், இதற்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைக்க காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.