ஆர்.எம்.வீரப்பனின் 98 ஆவது பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
Sep 9, 2023, 10:57 IST
ஆர்.எம்.வீரப்பனின் 98-ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்!