×

 ஊடகவியலாளர் மு.குணசேகரனின் தந்தை மறைவு - முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி 

 

சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரனின் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான மு.குணசேகரனின் தந்தை முனியா, வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்  அவரின் உடலுக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். 

இந்நிகழ்வின் போது திராவிட கழக தலைவர் ஆசிரியர் வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் மோகன் ,செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் ,மாநில திட்ட குழு தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் ,திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலிப்பூங்குன்றன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிலை குழு தலைவர் சிற்றரசு ஆகியோர் உடனிருந்தனர்.