×

"ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை" - நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் கண்டனம்!!

 

ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் கூறியதற்கு முதல்வர் கண்டனம்  

தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆங்கில நாடு நாளேடான ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில்,  நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ்அப் வரலாற்றை படித்துவிட்டு தான் இப்படி பேசி இருக்க வேண்டும்.  தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை.  அது ஜெயலலிதாவின் நாடகம் என்று அங்கிருந்து அனைவருக்கும் தெரியும் .முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்சி எம்.பி.யுமான   திருநாவுக்கரசர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் முன்பே ஒத்திகை பார்த்தார்.  அந்த காலகட்டத்தில் நானும் அவருடன் இருந்தேன் என்று சட்டசபையில் கூறியிருக்கிறார்.  நாடாளுமன்ற உரையில் தமிழக சட்டசபை நடவடிக்கைகளை திருத்தி பேசும் நிர்மலா சீதாராமன் செயல் வருத்தம் அளிக்கிறது.

மத்திய அரசின் மீதான எந்த குற்றச்சாட்டுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. தேர்தல் மேடையில் பேசுவதைப் போல காங்கிரஸ் விமர்சித்து நாடாளுமன்றத்தில் பேசினார். காங்கிரஸ் மீது 2014 இல் வைத்த அதே குற்றச்சாட்டை ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதும் வைக்கிறார். சந்தர்ப்பவாதத்திற்காகவே அதிமுகவை அருகில் வைத்திருக்கிறார் பிரதமர். ஆளுநர் மாளிகைகள் பாஜக அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதிகாரம் இல்லை என கூறும் ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருகிறார். எனக்கு வேலையே இல்லை என்று கூறும் ஆளுநர் வேண்டாத வேலைகள் எல்லாம் செய்கிறார். பாஜகவின் பிளவு வாத வெறுப்பு அரசியல் தான் மணிப்பூர் பற்றி எரிய காரணம். பாஜகவின் மதவாத அரசியல்தான் இரு பிரிவினிடையே பிளவை ஏற்படுத்தி ஆயுதம்  ஏந்த வைத்தது.   பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒரே அணியாக கூடாது என பாஜக நினைக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேராமல் இருக்கவே சிபிஐ , அமலாக்க துறை சோதனை நடத்தப்படுகிறது.. பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழக பாஜகவை பற்றியும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.