×

விஷச்சாராய விவகாரம் -  கூடுதல் நிவாரண உதவிகளை  அறிவித்தார் முதலமைச்சர்

 

விஷச்சாராய விவகாரத்தில் முன்பு அறிவிக்கப்பட்ட ₹10 லட்சம் நிவாரணத்துடன் கூடுதல் நிவாரண உதவிகளை சட்டப்பேரவையில் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
  • பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்பு தொகையாக 45,000 வழங்கப்படும்.

  • பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரண தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ. 5 லட்சம் நிலையான வைப்புத் தொகையாக வரவு வைக்கப்படும். 
  • பெற்றோர் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா ரூ. 3லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.
  • அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் அக்குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசின் நிதி உதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் குழந்தைகள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கப்படுவர்.