×

‘7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது’ – முதல்வர் திட்டவட்டம்!

மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவாகரத்தில் அரசியல் எடுபடாது என முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கரின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ஆளுநர் தாமதிப்பதால் 7.5% உள்
 

மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவாகரத்தில் அரசியல் எடுபடாது என முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கரின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ஆளுநர் தாமதிப்பதால் 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், உள் ஒதுக்கீடு விவாகரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

முன்னதாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு பல நாட்கள் ஆகியும், இன்னும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதன் காரணமாக, 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.