×

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் : முதல்வர் பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாக சென்று முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை, தென்காசி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்ற அவர் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாவட்ட முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாக சென்று முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை, தென்காசி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்ற அவர் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாவட்ட முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகிய 6 மாதத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு விட்டதாகவும் தடுப்பு அணைகள் கடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது என்றும் தொழில் வளம், வேளாண் வளம் மேம்பட அரசு பாடுபட்டு வருவதாகவும் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.