☰
×

'முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்!' – திமுக ஐடி விங் வெளியிட்ட பரபரப்புப் பதிவு!

 

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பாடகர் வேல்முருகன் முருகப்பெருமானையும், முதலமைச்சர் விஜய்யையும் தொடர்புபடுத்திப் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சியான திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்களும், மன்னிப்புக் கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார விழாவின் போது, பக்தர்கள் மத்தியில் பாடகர் வேல்முருகன் பக்திப் பாடல்களைப் பாடியதுடன் சில கருத்துகளையும் தெரிவித்தார்.

அப்போது அவர், "முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! முதல்வர் விஜய்க்கு அரோகரா! அமைச்சர் ரமேஷுக்கு அரோகரா!" என முழக்கமிட்டார்.ஆன்மிக நிகழ்வின் நேரலை வர்ணனையின்போது, முருகப் பெருமானை வாழ்த்தி முழக்கமிட்டதுடன், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ரமேஷ் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


இந்நிலையில் திமுக ஐடி விங் வெளியிட்டிருக்கும் பதிவில், 

அதிகாரம் கண்ணை மறைக்கலாம். ஆனால், விரதம் இருந்து, நடந்தே கோவிலுக்கு வந்த லட்சக்கணக்கானோர் முன்னிலையில் ‘விஜய்யை போல முருகன் வேல் எடுத்தார்’ என்று மநம்பிக்கையை சிறுமைப்படுத்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா? பக்தியும், கடவுள் நம்பிக்கையும் அவரவர் தனிநபர் விருப்பம் - உரிமை என்பதுதான் பேரறிஞர் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம். ஆட்சியதிகாரத்தின் அகந்தையில் நானே கடவுள் என்ற ஆணவம் திக்குத் தெரியாமல் கொண்டு போய் நிறுத்தும்! இப்படியெல்லாம் யார் உத்தரவிடுகிறார்கள் என்ற விளக்கத்தைத்  தந்து முதலமைச்சர்  மன்னிப்புக் கேட்க வேண்டும்.

allowfullscreen