முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை உடலுக்கு முதல்வர் அஞ்சலி
Aug 31, 2023, 12:42 IST
மறைந்த முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் கே. சாமிதுரை வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. எளிய பின்புலத்தில் பிறந்து, கடும் உழைப்பால் உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து சட்டத்தின் துணையுடன் சமூகநீதியை நிலைநாட்டியவர் சாமிதுரை . முதன்முறை உயர்நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்த, பதவி மேல் ஆசைகொள்ளாத அரிய மனிதர் அவர். பின்னர் இரண்டாம் முறை வாய்ப்பு வந்தபோதுதான் மரபு கருதி அதனை ஏற்றுக்கொண்டார்.