×

மார்ச் மாத ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை கொடுங்க! கொரோனா சிகிச்சை பணமில்லை- பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆயிரத்து 922ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்
 

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டிய நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆயிரத்து 922ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.3000 கோடி தேவை என்றும், மார்ச் மாத ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். கொரோனாவை தடுக்க, பொருளாதார இழப்பை ஈடுகட்ட ரூ.9000 கோடி சிறப்பு நிதி தேவை என்றும் வலியுறுத்தினார். தமிழகத்திற்கு நிதிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை வைப்பது இது மூன்றாவது முறையாகும்.தமிழகத்தில் இன்று வரை 7,48244 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இறப்பு சதவீதம் 1.09 சதவீதமாக இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

2020-21 ஆம் ஆண்டு நிதிக்குழு மானியத்தில் 50% ஐ ஊரக உள்ளாட்சிகளுக்கு விடுவிக்க வேண்டும், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் உணவு தானியங்களை வழங்க வேண்டும், நெல் கொள்முதல் செய்வதற்காக நிலுவை மானியத்தொகை ரூ. 1, 321 கோடியை விடுவிக்க வேண்டும், கொரோனாவை தடுக்கவும் பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் ரூ.9,000 கோடி சிறப்பு நிதி தேவை, கொரோனா தடுப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.