×

“ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ்” – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு நாயகன் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி புகழ்ந்து பேசினார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 9 மணிக்கு தொடங்கியது. இதனை முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் நேரில் சென்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். அந்த நிகழ்ச்சியில், ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்த ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏக்கள், காவல்துறை மற்றும் ஊடகத்துறையை வரவேற்கிறேன் என்று கூறிய முதல்வர் பழனிசாமி
 

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு நாயகன் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி புகழ்ந்து பேசினார்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 9 மணிக்கு தொடங்கியது. இதனை முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் நேரில் சென்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். அந்த நிகழ்ச்சியில், ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்த ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏக்கள், காவல்துறை மற்றும் ஊடகத்துறையை வரவேற்கிறேன் என்று கூறிய முதல்வர் பழனிசாமி ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என ஓபிஎஸ்க்கு புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து, உலகப் புகழ்பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான். திமிறி வரும் காளைகளை அடக்குவதற்காக வீரர்கள் களத்தில் இருக்கின்றனர். இதனை நாட்டு மக்கள் தொலைக்காட்சியில் கண்டு களிக்கின்றனர். நமது பாரம்பரிய விழாவான இந்த ஜல்லிக்கட்டை அதிமுக அரசு நிலைநிறுத்தியிருக்கிறது என பெருமிதத்துடன் கூறினார். மேலும், நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து முதல்வர் தனது உரையை முடித்துக் கொண்டார்.