×

#BREAKING  மகளிர் உரிமைத் தொகை உயரும்- மு.க.ஸ்டாலின்

 

"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது.


இந்நிகழ்வில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கிவைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எல்லாருக்கும் எல்லாமும் என்ற சமத்துவ சமுதாயம் வர வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம். இந்நிகழ்ச்சி வந்து 3 மணிநேரம் ஆகிறது. அனைவரின் பேச்சையும் கேட்டு நெகிழ்ந்தேன். 3 மணி நேரமாக தன்னம்பிக்கை
கதைகளை கேட்டு நெகிழ்ச்சியடைந்தேன். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அரசின் திட்டங்கள் என்பது கொள்கை, சிந்தனையின் செயல் வடிவமாகும். வரலாற்றை மாற்றி எழுதும் திட்டம்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் குடும்பங்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது. ஒரு திட்டம் மக்களை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதுதான் முக்கியம். திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 வழங்குவது தொடக்கமே, அது நிச்சயம் உயரும்” என உறுதி அளித்தார்.