×


சாகித்ய அகாதமி விருது -  'நீர்வழிப் படூஉம்' நாவலுக்கு முதலமைச்சர் பாராட்டு!

 

’நீர் வழிப்படூஉம்’ நாவல் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

எழுத்தாளர் தேவி பாரதி  நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவரின்  நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சூழலில்  ’நீர் வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.