×

உலக பத்திரிகை சுதந்திர நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 ஒவ்வொரு ஆண்டும் மே 3-ஆம் நாள் உலக பத்திரிகை சுதந்திர நாளாக அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரிய தகவல்களை அவ்வப்போது அளிப்பதில் பத்திரிகைகளும், ஊடகங்களும் முக்கியப் பங்கினை வகிப்பதால், பத்திரிகைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் உலக பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது.  ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்திடும் வகையில் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் பத்திரிகைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.