×

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை : காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்
 

 

ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.


கடந்த 28ம் தேதி இரவு நடிகர் ரஜினிகாந்த்  சென்னையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலைசுற்றல் காரணமாக ரஜினிகாந்த் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  ரத்தத்தில் அடைப்பினை நீக்கும் சிகிச்சையை மருத்துவ குழு பரிந்துரை செய்ததால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.  இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


 

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ரஜினியின் மனைவி லதாவிடம் கேட்டு தெரிந்துகொண்டார். ரஜினி நலமாக இருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்ததாகவும் விளக்கமளித்தார்.  இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ரஜினி உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.