தமிழ்நாட்டின் எல்லையை காத்த மாவீரர்களின் தியாகத்தை போற்றும் நாள் இன்று - முதலமைச்சர்!
Nov 1, 2024, 11:20 IST
தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1 என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தினம் நவம்பர் 01. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தனி மாநிலமாக அமைய போராடிய தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!