×

விஜயகாந்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர், விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தினார். விஜயகாந்தும் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தினார். இதையடுத்து திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விஜயகாந்திடம் நலம் விசாரித்தனர். இதற்கு முன்னதாக கடந்த மாதம் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன், முதல்வர் மு.க
 

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர், விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தினார். விஜயகாந்தும் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தினார். இதையடுத்து திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விஜயகாந்திடம் நலம் விசாரித்தனர்.

இதற்கு முன்னதாக கடந்த மாதம் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன், முதல்வர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தை நேரில் சந்தித்தார். அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்த உதயநிதி தேர்தல் வெற்றிக்காக விஜயகாந்திடம் இருந்து வாழ்த்துக்களையும் பெற்றார். முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உதயநிதிக்கு விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.