×

பட்டாசு தொழிற்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

 

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரிபுதூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் சுற்றுப்பயண செய்யவுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் சென்றார். விருதுநகர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்யச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். 

இதனை தொடர்ந்து மாலையில் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். . நாளை காலை, குமாரசாமி ராஜா நகரில் ₹77.12 கோடி மதிப்பீட்டில் 6  தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கிறார். . பின்னர் பட்டம்புதூரில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று 40,000 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவும், 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.