×

எல்காட் நிறுவனத்தின் கண்காட்சி... தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்!

 

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மின்னணு நிறுவனம் (Electronics Corporation of Tamil Nadu) சுருக்கமாக எல்காட் என அழைக்கப்படுகிறது. இதனை 1977அம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நிறுவினார். தகவல் தொழில்நுட்பவியல் சேவை சார்ந்த நிறுவனங்களை உருவாக்குதல், அரசு துறைகளுக்கு ஹார்டுவேர் கொள்முதல் செய்தல், தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியன எல்காட் நிறுவனத்தின் முதன்மையான பணிகளாகும். 

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களையும் எல்காட் உருவாக்குகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரிலுள்ள டைடல் பார்க் எல்காட்டின் கைவண்ணம் தான். குறிப்பாக மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதே எல்காட் நிறுவனம் தான். 

அதேபோல ஆண்டுதோறும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்தும். அந்த வகையில் இந்தாண்டும் Connect என்ற பெயரில் கண்காட்சியை நடத்தவிருந்தது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.