சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Dec 17, 2024, 13:17 IST
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.