வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Sep 5, 2023, 09:30 IST
ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , செப்டம்பர் 5 #TeachersDay! தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.