பாரா ஆசிய போட்டியில் வெள்ளி பதக்கம் - மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் வாழ்த்து!!
Oct 23, 2023, 11:39 IST
பாரா ஆசிய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், #AsianParaGames2022 உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.