கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Dec 2, 2023, 12:00 IST
கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி. கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் வைஷாலி. இதன்மூலம் தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும், இந்தியளவில் 3வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.