×

விகடன் முன்னாள் தலைமை புகைப்பட கலைஞர் சு.குமரேசன் மறைவு - முதலமைச்சர் இரங்கல்!

 

விகடன் முன்னாள் தலைமைப் புகைப்பட கலைஞர் சு.குமரேசன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  மூத்த புகைப்படப் பத்திரிகையாளர். விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் திரு. சு. குமரேசன் அவர்கள் நேற்றிரவு மறைவெய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன். திராவிட இயக்க மேடைகளில் பகுத்தறிவு ஒளிவீசிய மகா மதுரகவி வி.வே.முருகேச பாகவதர் அவர்களின் பெயரனான குமரேசன் அவர்கள், விகடன் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். கடந்த வாரம்தான் பூர்வீகக் குடிகளின் பாவலர் முருகேச பாகவதர் படைப்பு நூலுக்கு எனது வாழ்த்துச் செய்தியை பெற்றுச் சென்றார்.