×

அண்ணா அறிவாலயத்தில் பிறந்த நாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் பிறந்த நாள் கொண்டாடினார். 

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதேபோல், பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் பிறந்த நாள் கொண்டாடினார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், கழக நிர்வாகிகளோடு நம் தலைவர் அவர்கள் கேக் வெட்டி மகிழ்ந்த தருணத்தில் உடனிருந்தோம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் – நம் உரிமைகளை காத்திடவும் உறுதியுடன் செயல்படுதே நம் ஒரே இலக்கு என்று நம் தலைவர் அவர்கள் தலைமையில் உறுதிமொழியேற்றோம் என குறிப்பிட்டுள்ளார்.