×

ஊரடங்கு நீட்டிப்பு? மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,53,237ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64,733 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,365 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்
 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,53,237ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64,733 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,365 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை மறுநாள் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மே 31 ஆம் தேதியுடன் 4ஆவது ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஆலோசனை நடத்தவுள்ளார். ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து வரும் 30 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க மருத்துவக் குழு தமிழக முதலமைச்சரிடம் பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.