×

“என் அனுபவம் உதயநிதியின் வயது” : நெல்லையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

மக்களிடம் ஸ்டாலின் மனு வழங்குவது மக்களை ஏமாற்றும் நாடகம் என்று முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சேலம் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் இதுவரை வேலூர், திருப்பத்தூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்றுமுதல் தனது 6ஆம் கட்ட பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். நேற்று தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, இன்று மற்றும் நாளை திருநெல்வேலி மற்றும்
 

மக்களிடம் ஸ்டாலின் மனு வழங்குவது மக்களை ஏமாற்றும் நாடகம் என்று முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சேலம் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் இதுவரை வேலூர், திருப்பத்தூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்றுமுதல் தனது 6ஆம் கட்ட பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். நேற்று தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, இன்று மற்றும் நாளை திருநெல்வேலி மற்றும் தென்காசியில் பிரச்சாரம் செய்கிறார்.

இந்நிலையில் நெல்லை வள்ளியூரில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “மக்களிடம் ஸ்டாலின் மனு வழங்குவது மக்களை ஏமாற்றும் நாடகம். நாடாளுமன்ற தேர்தலின்போது திண்ணைப் பிரச்சாரம் மூலம் ஸ்டாலின் பெற்ற மக்கள் எங்கு போனது? தேர்தல் வரும்போது நாடகமாடி மக்களை திசை திருப்பி வெற்றி பெறும் கட்சி திமுக. என் அனுபவம் உதயநிதியின் வயது; திமுக அறிவிப்புகளை எல்லாம் உதயநிதி தான் அறிவிக்கிறார். மனு எழுதி பெட்டியில் போட வேண்டாம் 1100 போன் செய்தால் மக்களை தேடி அதிகாரிகள் வருவார்கள் ” என்றார்.