×

தளர்வுகளுக்கு மத்தியில் மருத்துவ குழுவுடன் இன்று முதல்வர் ஆலோசனை!

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பேருந்து சேவை, ரயில் சேவை என பொது போக்குவரத்தும் துவங்கியுள்ளன. இதனால் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனை
 

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பேருந்து சேவை, ரயில் சேவை என பொது போக்குவரத்தும் துவங்கியுள்ளன. இதனால் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் அதற்கு ஏற்ப மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசிக்கிறார் .

ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் கொரோனா அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.