×

‘பிரதமர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அமுதா நியமனம்’.. முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

பிரதமர் அலுவகத்திற்கு புதிதாக 16 இணை செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவும் ஒருவர். தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும் தருமபுரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றிய இவர், நேர்மையான அதிகாரி என பலராலும் பாராட்டப்பெற்றவர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிய இவரது செயல் பலரின் மனதையும் கவரச்செய்தது. இவர் பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த
 

பிரதமர் அலுவகத்திற்கு புதிதாக 16 இணை செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவும் ஒருவர். தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும் தருமபுரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றிய இவர், நேர்மையான அதிகாரி என பலராலும் பாராட்டப்பெற்றவர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிய இவரது செயல் பலரின் மனதையும் கவரச்செய்தது. இவர் பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஏஎஸ் அமுதாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி.அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணிசிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.