×

கால்பந்து விளையாடியபோது உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

 

சேலம், ஆத்தூரில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த 17 வயது கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

மாணவியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் கிராமம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் முதலாமாண்டு பயின்று வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டையைச் சேர்ந்த, செல்வி.திவ்யதர்ஷினி (வயது 17) த/பெ. (லேட்) வடிவேல் என்பவர் 23.1.2026 அன்று பிற்பகல் சக மாணவியருடன் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவி செல்வி.திவ்யதர்ஷினியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.