×

"பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றம்" - முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

 

பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதாவை பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா   அறிமுகம் செய்த நிலையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  நரிக்குறவர்,  குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இம்மசோதா வழிவகை செய்துள்ளது.  ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர் , நரிக்குறவர் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில் தற்போது பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,   "நரிக்குறவ & குருவிக்கார  சமூகங்களை ST பட்டியலில் சேர்ப்பதற்காக நான் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு  கடிதம் எழுதியிருந்தேன். எங்களின் தொடர் முயற்சியின் விளைவாக, LS இல் அதற்கான மசோதா குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.