×

காய்ச்சலுடன் வந்த நோயாளியை செருப்பால் அடித்த பணியாளர்? நடந்தது என்ன!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சரவணபவா என்பவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று இரவு அவர் கமுதி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நிறைய பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து பரிசோதனையும் காலையில் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். இதன் காரணமாக சரவணபவா, மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி இருக்கிறார். அச்சமயம் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்ய வந்த துப்புரவு
 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சரவணபவா என்பவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று இரவு அவர் கமுதி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நிறைய பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து பரிசோதனையும் காலையில் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். இதன் காரணமாக சரவணபவா, மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி இருக்கிறார்.

அச்சமயம் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளர் பாரதி, மருத்துவமனை வளாகத்தில் தங்கக் கூடாது என்று கடுமையாக கூறியிருக்கிறார். இதனால் துப்புரவு பணியாளருக்கும் சரவணபவாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த பாரதி, சரவணபவாவை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற என்னை பணியாளர் செருப்பால் அடித்து விட்டதாக சரவணபவா கமுதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில், அந்த துப்பரவு பணியாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.