×

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. புதுக்கோட்டை முதலிடம்..!!

 
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகின.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு, முடிவுகளை அறிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 93.80% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 0.51% உயர்ந்துள்ளது.
94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.47% மற்றும் 92.15% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
சிவகங்கை 97.54% இரண்டாம் இடம், தஞ்சை 97.41% மூன்றாம் இடம், திருச்சி 97.31% நான்காம் இடம், கன்னியாகுமரி 97.30% ஐந்தாம் இடம் பிடித்துள்ளன.