×

வாட்ஸ்அப்பில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!!

 
இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிபினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.
தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் Hi என மேசேஜ் அனுப்ப வேண்டும். அதற்கு வரும் பதிலில் செய்தியில் துறையின் பெயர் (Directorate of Government Examinations) மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தேர்வு செய்ய வேண்டும்.
அதற்கு வரும் பதிலுக்கு தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அனுப்பு வைக்கப்படும்.