×

2019 ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன் படி கடந்த ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி
 

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன் படி கடந்த ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது.

அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 829 பணியிடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.