குடிமகன்கள் ஷாக்..! இனி ஒருவருக்கு இவ்வளவு தான் லிமிட்..!
டாஸ்மாக் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் முடியும் எவ்வளவு அளவுக்கு மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, டாஸ்மாக்கில் ஒரு நபருக்கு 4.5 லிட்டர் வரை மதுபான விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும், 7.8 லிட்டர் பீர் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அதிகபட்சமாக 9 லிட்டர் ஓயின் விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மதுபானத்தை 750 மில்லி லிட்டர் ஆறு பாட்டில்களாகவோ, 375 மில்லி லிட்டர் 12 அரை பாட்டில்களாகவோ, 180 மில்லி லிட்டர் 24 கால் பாட்டில்களாகவோ ஒரு நபருக்கு ஒருநாளில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஒரு நபருக்கு 12 பீர் பாட்டில்கள் (650 மில்லி லிட்டர்) மட்டும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 குவாட்டர், 12 ஆஃப், 6 புல் பாட்டில்கள் ஒருவருக்கு வழங்கி, விற்பனை செய்து பில் வழங்க வேண்டும் என்றும் 12 பீர் பாட்டில் தனி நபருக்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும என்று அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அரசியல் கட்சி பிரமுகர்கள் டாஸ்மாக்கில் மொத்தமாக மதுகளை வாங்கி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.