×

குடிமகன்கள் ஷாக்..! இந்த பகுதிகளில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு! 

 

முதல்வர் ஸ்டாலின், கீரனூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து, கீரனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 டாஸ்மாக் கடைகள், 2 மனமகிழ் மன்றங்கள், மேலும் மாத்தூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் என மொத்தம் 9 இடங்கள் திங்கள்கிழமை முழு நாளும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.