"Citizen Portal 2 நாட்களுக்கு செயல்படாது"- பதிவுத்துறை
2 நாட்களுக்கு இணையதள Citizen Portal செயல்படாது என பதிவுத்துறை அறிவித்துள்ளது.
பதிவுத்துறை இணையதளமான https://tnreginet.gov.in பராமரிப்பு மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்திற்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் இன்று(ஜன.21) இரவு 7 மணியிலிருந்து நாளை காலை 11 மணி வரை Citizen Portal செயல்படாது. இருப்பினும் மேற்கூறிய இரண்டு தினங்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பராமரிப்பு மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்திற்கு தர மேம்பாடு செயல்பட இருப்பதால் itizen Portal செயல்படாது என பதிவுத்துறை அறிவித்துள்ளது.
22.01.2026 அன்று பத்திரம் பதிவு செய்ய உள்ள பொதுமக்கள் மேற்படி குறிப்பிட்ட நேரத்தில் இணையதளம் செயல்படாது என்பதை கருத்தில் கொண்டு இன்று இரவு 7 மணிக்குள் டோக்கன் எடுப்பது, ஆன்லைன் கட்டணம் செலுத்துவது, வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல்களை பெறுவது போன்ற பதிவுத்துறையின் இணையதள சேவைகளை தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளுமாறு பதிவுத்துறை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.