#BREAKING குழந்தைகள் தினம்- பள்ளிகளில் கேக் வழங்க தமிழக அரசு உத்தரவு
Oct 11, 2026, 08:59 IST
நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு ரூ.9.27 கோடி மதிப்பில் கேக்குகள் வழங்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 61,84,566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு கேக்கின் எடை 45 கிராம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கேக்குகளின் காலாவதி காலம் நவம்பர் 14-ஆம் தேதி நிலவரப்படி, குறைந்தபட்சம் 30 நாட்கள் எஞ்சியிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.