உதயநிதிக்கு முதலமைச்சர் மறைமுக அட்வைஸ்..!
தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று (செப்.7) மீண்டும் கூடிய நிலையில், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்து வருகிறார். அப்போது பெண்களை இழிவாக பேசக்கூடாது, அனைத்துப் பெண்களும் தாயாக, தங்கையாக நினைக்க வேண்டும்” என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மறைமுகமாக அட்வைஸ் கொடுத்துள்ளார். முன்னதாக பெண்களை இழிவாக பேசியதாக கூறி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றத்தை பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். குற்றம் நடந்துவிட்டது என்பதால் மட்டுமே, ஒட்டுமெத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீரந்துவிட்டது எனக் கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவங்களுக்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கிலும் வேறுபாடு உள்ளது என சட்டம் ஒழுங்கு குறித்து பேரவையில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கியுள்ளார்.
தெருவில் நடைபெறும் குற்றங்களுடன் மட்டும் முடிவதில்லை, நாம் டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைந்துவிட்டோம். அதனால் சைபர் குற்றங்களும் நவீன சட்டம் ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன என பதிலுறையில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.