×

#JUST IN : 5 மடங்கு உயர்த்தினார் முதல்வர் விஜய்..!

 

முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “8,800 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3 லட்சத்து 16 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஆவின் பால் நிறுவனம் மூலமாக 31 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால் விலை ஒரு லிட்டர் 38இல் இருந்து 41 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து,

  • சென்னை பெரம்பூரில் 300 கோடி மதிப்பீட்டில் உலக தர பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும்
  • சென்னை பெரம்பூரில் 400 படுக்கை வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்
  • முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டை 5 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ஆக உயர்த்தப்படும்.
  • தமிழ்நாட்டில் 7 புதிய செவிலியர் கல்லூரிகள் கட்டப்படும். புதிதாக அமையும் 7 செவிலியர் கல்லூரிகளில் 620 பி.எஸ்.சி நர்சிங் இடம் உருவாக்கப்படும்

ஆகிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.