‘All is well Confidenta இருங்க’- முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து அட்டை
குழந்தைகள் தினத்தன்று அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு கேக்குடன் முதல்வரின் வாழ்த்து அட்டை வழங்கப்பட இருக்கின்றன.
நாடு முழுவதும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படும். எனினும், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் தமிழக அரசு பள்ளிகளில் 13-ம் தேதியே குழந்தைகள் தினம் கொண்டாடவும், கேக் வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, குழந்தைகள் தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.
குழந்தைகள் தினத்தையொட்டி நவம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கேக்குடன், முதல்வர் விஜயின் வாழ்த்து அட்டையும் வழங்கப்படவுள்ளன. வாழ்த்து அட்டையின் முதல் பக்கத்தில் முதல்வர் விஜய் படத்துடன் ‘All is well - Confidenta இருங்க’ பிரியமுடன் விஜய் என்ற வாசகமும், பின் பக்கத்தில் டைம் டேபிளும் இடம்பெற்றுள்ளது.